katunayake airport
இலங்கைசெய்திகள்

போலி விசாவில் லண்டன் செல்ல முயற்சித்தோர் கைது! – இருவர் யாழ்ப்பாணம்

Share

போலி விசாவைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்குச் செல்ல முயன்ற மூன்று இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மல்லாவி ஆகிய பகுதிகளில் வசிக்கும் 23 மற்றும் 31 வயதுடைய பயணிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இந்த மூன்று இலங்கையர்களும் லண்டன் செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் தங்களுடைய குடிவரவு நடைமுறைகளை சரிசெய்வதற்காக விமான நிலையத்தில் உள்ள குடிவரவு கவுண்டருக்கு வந்திருந்தனர்.

கடமையில் இருந்த குடிவரவு அதிகாரிகள், அவர்களது பயண ஆவணங்களை ஆய்வு செய்த போது, ​​விசாக்கள் போலியானது என கண்டறிந்தனர். இதையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் விசாரணைகளுக்காக கட்டுநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...