rajasthans free medicine scheme secures top rank
இலங்கைசெய்திகள்

மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு!!

Share

மிகவும் அத்தியாவசியமான 14 வகையான மருந்துப் பொருட்கள் தற்போது கைவசம் இருக்கின்ற போதிலும், எதிர்வரும் காலத்துக்கான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அவற்றை கொள்வனவு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய அளவில் மருந்துப்பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலையொன்று ஏற்படும் என சுகாதார அமைச்சின் மருந்து விநியோக பிரதி பணிப்பாளர் நாயகமும் வைத்தியருமான டி.ஆர்.கே.ஹேரத் தெரிவித்துள்ளார்.

எந்த விதத்திலேனும் அத்தியாவசியமான 14 வகையான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்தாக வேண்டும். இல்லையேல் நிலைமைகள் மோசமடையும். அதேபோல் இரண்டாம் கட்டத்தில் அவசியமான 380 மருந்துப் பொருட்களில் 160 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. ஆனால் தட்டுப்பாடு ஏற்படும் மருந்துகளுக்கு பதிலாக மாற்று மருந்துகளை பரிந்துரைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சேலைன்களுக்கும் தட்டுப்பாடு நிலவியது, ஆனால் தற்போது சேலைன்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்கின்ற காரணத்தினால், நாட்டில் சேலைன் தட்டுப்பாடு ஏற்படவில்லை. இலங்கைக்கு தேவையான சேலைன்கள் இலங்கையிலேயே தாராளமாக கிடைக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
palansena
இலங்கை

பல்லன்சேன சிறைச்சாலையில் தொடரும் போராட்டம் – அதிகரிக்கப்பட்டது பாதுகாப்பு!

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்றம்...

parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...