அரசியல்
அமைச்சர்கள் பதவிகளுக்கு ஆப்பு!


கட்சி முடிவை மீறி இராஜாங்க மற்றும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மாவட்ட தலைவர்கள், தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பதவிகள் மற்றும் மத்திய செயற்குழுவின் உறுப்பினர் பதவிகளிலிருந்தும் சம்பந்தப்பட்டவர்களை நீக்குவதற்கு கட்சியின் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த தீர்மானத்தை கடிதம் ஊடாக உரியவர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
சுதந்திரக்கட்சியின் 14 எம்.பிக்களில் இதுவரை 8 பேர் இராஜாங்க மற்றும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.