1656991584 termeric 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2000 கிலோ மஞ்சள் பூநகரியில் மீட்பு!

Share

நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சள் தொகை ராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.

பூநகரி வெட்டக்காடு பகுதியில் நேற்று இரவு குறித்த மஞ்சள் தொகை மீட்கப்பட்டது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக 66ஆவது பிரிவு பகுதியைச் சேர்ந்த இராணுவத்தினரால் சோதனையிடப்பட்டபோதே இவை மீட்கப்பட்டது.

கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் 65 பெரிய பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,000 கிலோ மஞ்சள் மற்றும் 03 பைகளில் இருந்த பூச்சிகொல்லி மருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த மஞ்சள் தொகை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...