IMG 20220619 WA0028 1
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களின் உரிமைகளை மதிக்கின்ற அரசியல் தீர்வைக் காண்பது அவசியம்! – ஜ.நாவுக்கு மகஜர்

Share

தற்போதைய பொருளாதார சிக்கலுக்கான தீர்வைக் காண்பது எந்தளவு முக்கியமோ, அதேபோல தமிழர்களதும் ஏனையோரதும் கூட்டு உரிமைகளை மதிக்கின்ற அரசியல் தீர்வைக் காண்பதென்பதும் முக்கியமானது என ஜநாவுக்கான மகஜரில் இன்றைய போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸின் உருவப்பொம்மையை எரித்து யாழ்ப்பாணத்திலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகரின் கள அலுவலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்திற்கு பின்னர் போராட்டக்காரர்கள் ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை கையளித்தனர் .

வட-கிழக்கு பொது அமைப்புகள் ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கும், ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கும் முன்வைக்கும் வேண்டுதல் மனு எனும் தலைப்பில் இந்த மகஜர் ஆங்கில மொழிமூலம் தயாரிக்கப்பட்டது.

அந்த மகஜரிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மகஜரின் தமிழ் வடிவத்தில்,

பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுக்காக சர்வதேச விசாரணையை காவு கொடுக்கவேண்டாம்.

இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 50ஆம் அமர்வில் 13 ஜூன் 2022 அன்று ஆற்றிய உரையில் சொல்லியிருந்த அப்பட்டமான, உள்நோக்கத்துடனான பொய்களை தமிழர்கள் கண்டிக்கிறார்கள்.

இலங்கைத் தீவின் வடக்கு – கிழக்கை தழுவிய செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் பொது அமைப்புகளாகிய கீழே கையெழுத்திட்டிருக்கும் அமைப்புகளைச் சேர்ந்தோராகிய நாம் யாழ்ப்பாணத்தில் 19 ஜூன் அன்று அமைச்சர் பீரிஸின் மேற்படி உரையைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்குபற்றுவதற்காகக் கூடியபோது தங்களுக்கு மகஜரினை முன்வைத்துள்ளோம்.

அமைச்சரின் குறித்த அறிக்கையிடல் ஐ.நா. உருவாக்கியுள்ள ஆதாரங்களை சேகரிப்பதற்காக ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 46-1 தீர்மானத்திற்கு அமைவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வெளியகப் பொறிமுறையை ஐ.நா.வே இல்லாது ஆக்கிவிடும் தீய உள்நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. இதை நாம் வெளிப்படையாகக் கண்டிப்பதற்காகவே ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபடுகிறோம்.

தனது ஜெனீவா உரையில், 46-1 தீர்மானம் தொடர்பாக பேசுகையில், இலங்கைத் தீவில் அண்மைக்காலங்களில் ஏற்பட்டுள்ள போராட்டங்கள் பொருளாதார இடர் நீக்கத்தையும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களைக் கோரியவையாகவுமே இருப்பதாக சுட்டிப் பேசியதன் மூலம், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் ஏதோ தமிழ் மக்கள் இலங்கை அரசு தம்மீது இழைத்த இன அழிப்பு உட்பட்ட பெரும் சர்வதேச நீதி தொடர்பான போராட்டங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைத் தற்போது குறைத்துவிட்டார்கள் என்ற தொனிப்பொருளை திரிபுநோக்கத்தோடு முன்வைத்திருக்கிறார்.

ஆனால், உண்மை நிலை அவர் சொன்னது போன்றதல்ல என்பதை யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தோடு தங்களுக்கு மீள்வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகிறோம்.

இலங்கை அரசு இனப் பிரச்சனையை நெடுங்காலமாக தீர்க்காதிருந்தமையால் திரட்சி பெற்ற சிக்கலின் ஒரு விளைவாகவும் சர்வதேச குற்றங்கள் தொடர்பான தண்டனையிலிருந்து தொடர்ந்தும் தான் தப்பித்துக்கொள்ளும் தன்மையைப் பேணிக்கொண்டிருப்பதால் ஏற்பட்ட ஒரு விளைவாகவும் தற்போது எழுந்துள்ள பொருளாதாரச் சிக்கலை வட-கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் கருதுகிறார்கள்.

உள்ளார்ந்த இனப் பிரச்சனைக்கான தீர்வின் மூலமும், கடந்த கால குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை சுயாதீன சர்வதேச விசாரணை மூலம் உறுதிப்படுத்துவதன் மூலமுமே தேவைப்படும் அரசியல் ஸ்திரத்தன்மையைக் கூட இங்கு எய்த முடியும்.

தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை தடுத்து நிறுத்துவதற்கும், மீண்டும் இந்தத் தீவில் எந்தவொரு தேசத்துக்கோ, மக்களுக்கோ, சமூகத்துக்கோ, சிறுபான்மைக்கோ இன அழிப்பு மற்றும் பாதகக் குற்றங்களும் நடைபெறாதிருத்தலை உறுதிப்படுத்துவதற்கும் கடந்தகாலக் குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் முக்கியமானது.

ஆகவே, தற்போதைய பொருளாதார சிக்கலுக்கான தீர்வைக் காண்பது எந்தளவு முக்கியமோ அதேபோல தமிழர்களதும் ஏனையோரதும் கூட்டு உரிமைகளை மதிக்கின்ற அரசியற் தீர்வைக் காண்பதென்பதும் முக்கியமானது.

இதற்கும் அப்பால், தான் மனித உரிமைப் பேரவையில் முன்வைத்த அனைத்து விடயங்களிலும் அமைச்சர் முற்றிலும் தவறான பொய்த் தகவல்களையே வழங்கியிருக்கிறார்.

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் வெற்றுச் சோடினையாக ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் எதுவும் நீண்டகாலம் சிறையில் வாடும் தமிழ் அரசியற் கைதிகளுக்கு எந்தவித பலனையும் தரவில்லை.

இலங்கை இராணுவத்தினதும் அதன் முகவர்களதும் கைகளால் வலிந்து காணாமற் செய்யப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினர், அவர்கள் குறித்த எந்தப் பதிலையும் அரசு வழங்காத நிலையில், இன்னும் தமது அன்புக்குரியோரை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

தமது உறவுகள் வலிந்து காணமலாக்கப்பட்டது தமிழர்கள் மீது திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஓர் அழிப்பு நடவடிக்கை என்றே குடும்பத்தினர் அனைவரும் கருதுகின்றனர்.

எமது தமிழ்ப் நாடாளுமன்ற உறுப்பினர்களும் குடிசார் சமூகப் பிரதிநிதிகளும் ஒன்றுகூடி 15 ஜனவரி 2021 அன்று தயாரித்திருந்த கூட்டுக் கோரிக்கையில் இன அழிப்பு உள்ளிட்ட குற்றங்கள் விசாரிக்கப்படவேண்டும் என்று கோரியிருந்தார்கள்.

அதைப்போலவே, உண்மையான ஒரு பக்கசார்பற்ற, சுதந்திரமான சர்வதேச ஆதாரத் திரட்டலுடனான பொறிமுறையையும் கோரியிருந்தார்கள்.

இன அழிப்புக் குற்றத்தை ஆராய ஐ.நா. இதுவரை தவறியுள்ளதையிட்டு நாம் கவலை கொண்டுள்ளோம். 46-1 எனும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆதாரப் பொறிமுறையை மட்டுமே கொண்டுவந்தது.

ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் 46-1 தீர்மானத்தின் இயங்குவிதி ஆறைச் சரியாகவே பொருள் கோடல் செய்துள்ளார் என்பதைக் குறிப்பெடுத்துக்கொள்ளும் அதேவேளை, தமிழர்கள் முழுமையான ஒரு சர்வதேச, பக்கசார்பற்ற, சுயாதீன விசாரணைப் பொறிமுறையையே அடுத்த தீர்மானத்தில் எதிர்பார்க்கிறார்கள் என்பதையும், இன அழிப்பு என்ற குற்றத்தைக் கண்டறிவதற்கான ஆணையையும் அடுத்த தீர்மானம் வழங்கவேண்டும் என்றும் வேண்டுகிறோம்.

இலங்கை அரசு பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை சர்வதேச நீதியோடு பண்டமாற்றம் செய்ய ஐ.நா.தொகுதி அனுமதியளிக்கக்கூடாது என்றும் வேண்டுகிறோம் – என்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

25 690304e16a39e
அரசியல்இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: ஆயுதம் கோரிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், வெளிநாட்டிலிருந்து தற்காப்புக்காக மூன்று ஆபத்தான மிளகு ஸ்ப்ரேக்கள்...

25 690332f7d691e
இலங்கைஉலகம்செய்திகள்

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற இருப்பவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

2025 ஒக்டோபர் 27 ஆம் திகதி, கனடா அரசாங்கம் தனது Express Entry அமைப்பின் மாகாண...

25 690349f3051fc
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றில் கேலிக்கூத்து நடக்கிறது; வயது முதிர்ந்த ரணிலை விடுங்கள் – டயானா கமகே

ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் கட்சிக்குள் இளைஞர்களை சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு தலைமைப் பதவியை...