அரசியல்
நாட்டு நலன் கருதியே அரசை ஆதரித்தேன்! – கூறுகிறார் சாந்த பண்டார
நாட்டு நலன் கருதியும், மனசாட்சியின் பிரகாரமுமே அரசை ஆதரிக்கும் முடிவை எடுத்தேன்.” – என்று இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
அரசுக்கு ஆதரவு தெரிவித்து விவசாயத்துறை இராஜாங்க அமைச்சு பதவியை நேற்று பெற்றுக்கொண்ட சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, இன்று கடமைகளை பொறுப்பேற்றார்.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர்,
” இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. அந்த முயற்சி தோல்வி கண்டது. எனவே ,நாட்டை வங்குரோத்து அடையவிடமுடியாது. ஜனாதிபதி விடுத்த அழைப்பின் பிரகாரம்தான் இராஜாங்க அமைச்சு பதவியை ஏற்றேன். விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க வேண்டியுள்ளது. மனசாட்சிக்கு கட்டுப்பட்டே இந்த முடிவை எடுத்தேன் . ” – என்று கூறினார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login