தனக்கு வழங்கப்பட்டிருந்த அரச வாகனங்களை மீள ஒப்படைத்துவிட்டு, வாடகை ஆட்டோவில் அமைச்சிலிருந்து வீடு நோக்கி சென்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த.
இராஜாங்க அமைச்சு பதவியை வகித்த சுசில் பிரேமஜயந்த இன்று காலை அமைச்சிலுள்ள தனது அலுவலகத்துக்கு வந்தார்.
ஆவணங்களையெல்லாம் சரிபார்த்த பின்னர், தனக்கு வழங்கப்பட்டிருந்த அரச வாகனங்களை மீள ஒப்படைத்தார். அதன்பின்னர் வாடகை ஆட்டோவில் வீடு திரும்பினார்.
” உயர்நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பணியாற்றுவேன். வாகனம் வாங்குவதற்கு சில நாட்கள் செல்லும்.” – என கூறிவிட்டு அமைச்சர் சென்றார்.
#SrilankaNews
Leave a comment