இலங்கை
நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு 3 கோடி நிதி!
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்களின் வாழ்வியலை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி இந்த இரு மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட நன்னீர் நிலைகளில் மீன் மற்றும் இறால் குஞ்சுகளை இடும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதற்காக 3 கோடி 22 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதுவரை முல்லைத்தீவு மாவட்டத்தில் 18 லட்சம் 65 ஆயிரம் இறால் குஞ்சுகளும் சுமார் 22 லட்சத்து 81 ஆயிரத்து 314 மீன் குஞ்சுகளும் சுமார் தெரிவு செய்யப்பட்ட 25 நீர்நிலைகளில் இடப்பட்டுள்ளன.
அதேபோல், கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு, அக்கராயன் உட்பட சுமார் 7 குளங்களிலும் பருவகால நீர்நிலைகளிலுமாக 12 லட்சம் இறால் குஞ்சுகளும் 13 லட்சத்து 89 ஆயிரத்து 570 மீன் குஞ்சுகளும் விடப்பட்டுள்ளன.
எஞ்சிய இறால் மற்றும் மீன் குஞ்சுகள் எதிர்வரும் வாரங்களில் தெரிவு செய்யப்பட்ட நீர்நிலைகளில் விடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரம் குடும்பங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 700 குடும்பங்களும் நன்மையடைவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
You must be logged in to post a comment Login