சுற்றுலாப் பயணிகளின் கட்டுப்பாடுகளில் மாற்றம்
இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் தடுப்பூசிகளைப் பெற்ற சுற்றுலாப் பயணிகள் தற்போது நாட்டிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரங்கு முடிவடைந்த பின்னர் நாட்டின் எப்பகுதிக்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் குறித்த விவரங்கள் சகல மாகாண சுகாதாரப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி ஹோட்டல்கள், உணவகங்கள் போன்றவற்றுக்கும் செல்லலாம். அத்துடன் மதுவரி ஆணையாளர் நாயகத்தின் அனுமதிப்பத்திரமுள்ள மதுபானசாலைகள் சுற்றுலாப் பயணிகளுக்கு மதுபானத்தை விநியோகிக்கலாம் எனலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment