அம்பாந்தோட்டை லுனுகம்வெஹர பகுதியில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனை நிலநடுக்கத் தரவுகள் மற்றும் சுனாமி கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் 2.4 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக எதுவித சேதங்களும் பதிவாகவில்லை எனவும் ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நடுக்கம் மற்றும் அண்மையில் ஏற்பட்ட சிறிய நடுக்கம் ஆகியவை தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
–
Leave a comment