இலங்கையில் கொரோனா நோயாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 140 தொன் ஒட்சிசன் வழங்கப்படுகிறது என ஔடத உற்பத்திகள், வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயாளர்களுக்கு வழங்குவதற்காக வாராந்தம் 300 தொன் ஒட்சிசனை இந்தியாவிலிருந்து கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளோம் என்று சமன் ரத்நாயக்க ஏற்கனவே கூறியுள்ளார்.
கொரோனாத் தொற்று பரவுவதற்கு முன்னர் நாட்டில் நோயாளர்களுக்காக 20 தொன் ஒட்சிசன் அளவு போதுமானதாக இருந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1 Comment