vikneshwaran
அரசியல்இலங்கைசெய்திகள்

13 ஆவது திருத்தம் – மகாநாயக்க தேரர்களுக்கு விக்னேஸ்வரன் கடிதம்

Share

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எண்ணமே நாட்டில் பொருளாதார ஸ்திரதன்மையற்ற நிலையை தோற்றுவித்துள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் மூன்று பீடங்களினதும் நான்கு மகாநாயக்க தேரர்கள் ஒன்றிணைந்து அண்மையில் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தனர்.

குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை மேற்கோள் காட்டி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் மகாநாயக்க தேரர்களுக்கு பதில் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அகிம்சை என்பது இந்து, பௌத்தம், சமணம் ஆகிய மதங்களின் முக்கிய கோட்பாடு எனவும், ஒரு பகுதி மக்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய விடயத்தை தேரர்களால் எவ்வாறு போதிக்க முடியும் எனவும் சி.வி. விக்னேஸ்வரன் மகாநாயக்க தேரர்களிடம் வினவியுள்ளார்.

அத்துடன், தமிழ் பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் 3000 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன்,  இலங்கையின் புராதன வரலாற்றை உத்தியோகபூர்வமாக எழுதுவதற்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் இந்திய, சர்வதேச வரலாற்றாசிரியர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிக்க  ஜனாதிபதியை கோருமாறும் மகாநாயக்க தேரர்களை வலியுறுத்தியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 4
செய்திகள்இலங்கை

மன்னாரில் பற்றியெரியும் குப்பைமேடு : மக்கள் கடும் பாதிப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட...

image 1200x630 3
செய்திகள்இலங்கை

தான் இறந்துவிட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்துவெளியிட்ட அரசியல்வாதி

தான் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாகவும், இது குறித்து விசாரித்து...

image 1200x630 2
செய்திகள்உலகம்

ஆயுதங்களை கீழே போடுங்கள் ஹமாஸிற்கு அமெரிக்கா கண்டிப்பு

மத்திய கிழக்கில் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மூத்த அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர், “காசாவில் அப்பாவி பாலஸ்தீன...

image 1200x630 1 2
செய்திகள்இந்தியா

இலங்கை சிறைச்சாலைகளில் கடும் நெரிசல் நிலை

இலங்கையின் சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள 36 சிறைகளில் சுமார்...