cash
இலங்கைசெய்திகள்

அடிப்படை தேவைக்கு மாதாந்தம் 13,000 தனிநபருக்கு!!

Share

மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் ஒக்டோபர் மாதத்திற்கான தேசிய வறுமை மட்டத்தை அறிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி,

இலங்கையில் ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு குறைந்தபட்ச மாதாந்தத் 13,810 ரூபா தேவையாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட அடிப்படையின்படி, கொழும்பு மாவட்டத்தில் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 14,894 ரூபாவான அதிகளவான தொகை தேவையாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மொனராகலை மாவட்டம் மிகக் குறைந்த செலவைக் கொண்டுள்ளதுடன் அந்த தொகை 13,204 ரூபாயாகும்.

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 அக்டோபரில் பதிவான உயர் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மதிப்பு உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...