மின்தடை
இலங்கைசெய்திகள்

நாளை 13 மணி நேரம் மின்வெட்டு!

Share

நாட்டில் நாளை வியாழக்கிழமை 13 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள துஎன இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

அனல் மின் நிலையங்களை இயக்குவதற்குத் தேவையான டீசல் மற்றும் உலை எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தால் இலங்கை மின்சார சபையால் இந்த மாதம் 5ஆம் திகதி வரை இவ்வாறான மின்வெட்டை மேற்கொள்ள வேண்டியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 15 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி நாளை A, B, C, D, E, F ஆகிய பிரிவுகளில் காலை 3 மணி முதல் 6 மணி வரை, மதியம் 12 மணி முதல் 4 மணி வரை, மாலை 6 மணி முதல் 12 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

G, H, I, J, K, L ஆகிய பிரிவுகளில் காலை 12 மணி முதல் 3 மணி வரை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

P, Q, R, S ஆகிய பிரிவுகளில் காலை 3 மணி முதல் 6 மணி வரை, மதியம் 12 மணி முதல் 4 மணி வரை, மாலை 6 மணி முதல் 12 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

T, U, V, W ஆகிய பிரிவுகளில் காலை 12 மணி முதல் 3 மணி வரை, காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

M, N, O, X, Y, Z ஆகிய பிரிவுகளில் காலை 5.30 முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
eb shok
இலங்கை

மின்சாரம் தாக்கியதில் ஒன்பது மாத குழந்தையின் தாய் பலி.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பகுதியில் கிணற்றில் வீழ்ந்த கோழிக்குஞ்சை மீட்க முற்பட்ட தினேஷ் நேசமலர்...

wether
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

இலங்கையினை பொறுத்தவரை இன்று பகல் வேளையில் மனித உடலினால் உணரக்கூடிய எச்சரிக்கை மட்டத்தில் அதிகரித்த வெப்பநிலை...

Pastor Jerome
இலங்கை

அநுரவை புகழ்ந்த சர்ச்சையில் சிக்கிய போதகர்.

மிராக்கல் டோம் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றின் போது, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த, ஜெரோம் பெர்னாண்டோ...

man death body
இலங்கை

பூட்டிய வீட்டிற்குள் ஆண் ஒருவரின் சடலம் – யாழில் சம்பவம்.

  யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியதாக...