பெண் சாவு
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் திடீர் சுகவீனம் காரணமாக இளம் பெண் சாவு!

Share

திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அவரது உடல்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், கீரிமலை – கூவில் பகுதியைச் சேர்ந்தவரும், கெப்பற்றிக்கொலாவ குடும்பநல உத்தியோகஸ்தருமான கந்தசாமி நிதர்சினி (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கெப்பற்றிக்கொலாவையில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீர் சுகவீனம் காரணமாக கீரிமலையில் உள்ள தனது வீட்டுக்கு அவர் திரும்பியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 26ஆம் திகதி உடல் நிலை மோசமானதை அடுத்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

மறுநாள் 27ஆம் திகதி அவர் மயக்க நிலைக்கு சென்றதை அடுத்து , மேலதிக சிகிச்சைக்காக யாழ், போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் உடல் கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...