24 66205e846f602
இலங்கைசெய்திகள்

அம்பாந்தோட்டையில் 12 வயது சிறுவன் வெட்டிக்கொலை

Share

அம்பாந்தோட்டையில் 12 வயது சிறுவன் வெட்டிக்கொலை

அம்பாந்தோட்டை (Hambantota) – பெலியத்தை பிரதேசத்தில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் தந்தையை கூரிய ஆயுத்தினால் தாக்கி காயப்படுத்திய கும்பல், மகனை வெட்டிக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று (17.04.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது 12 வயதுடைய சிறுவனே மேற்படி சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 38 வயதுடைய தந்தை படுகாயம் அடைந்த நிலையில் பெலியத்தை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காணித் தகராறு காரணமாக இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பிரதேசத்தில் இருந்து தப்பியோடியுள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Tourist Visa
இலங்கை

இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை!

தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா...

dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

chemmani Mass grave
இலங்கை

செம்மணிக்கு செல்ல ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவிற்கு நீதிமன்றம் பச்சைக்கொடி.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை...

ஜி.எல். பீரிஸ்
இலங்கை

ஜெனீவாவில் இலங்கைக்கு இதுவும் நடக்கலாம் – எச்சரிக்கும் ஜி.எல். பீரிஸ்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. அங்கு...