24 6620652c63520
இலங்கைசெய்திகள்

பொது வேட்பாளராக களமிறங்குவது தொடர்பில் விஜயதாஸ விரைவில் முடிவு

Share

பொது வேட்பாளராக களமிறங்குவது தொடர்பில் விஜயதாஸ விரைவில் முடிவு

இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக என்னைக் களமிறங்குமாறு முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் தொடர்பில் இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

“ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குமாறு பல தரப்பினரும் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், அதேபோல் மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதத்தலைவர்கள் ஆகியோரும் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் சிந்தித்து, நன்கு ஆராய்ந்து அடுத்த சில வாரங்களில் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளேன்.

எமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, கட்சியைப் பார்த்து வாக்களிப்பதைவிட, நபர்கள் மற்றும் கொள்கைகளுக்கு முன்னுரிமையளித்தே இனி வாக்களிப்பார்கள்“ என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...