Robbery.jpg
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் 10 இலட்சம் வழிப்பறி!

Share

தொழிலில் முதலீடு செய்வதற்காக ஆலயத்தில் பூஜையில் வைத்து எடுத்த 10 இலட்ச ரூபா பணத்தினை இருவர் வழிப்பறி கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் ஆலயம் முன்பாக நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் தான் புதிதாக தொடங்கவிருந்த தொழில் முயற்சிக்கு முதலீடு செய்வதற்கான 10 இலட்ச ரூபாய் பணத்தினை முனியப்பர் ஆலயத்தில் பூஜையில் வைத்து எடுத்து தருமாறு பூசகரிடம் கொடுத்துள்ளார்.

பூசகரும் அவரின் வேண்டுதலின் பிரகாரம் அந்த பணத்தினை பூஜையில் வைத்து எடுத்துக்கொடுத்துள்ளார்.

பூஜையில் வைத்து எடுத்த பணத்தினை பூசகரிடம் வாங்கிக்கொண்டு ஆலயத்திற்கு வெளியில் வருவதற்கு இடையில் அங்கு நின்றிருந்த இருவர் அப்பணத்தினை பறித்துக்கொண்டு அவ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...