farming
இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்கு கடன் வசதி!

Share

எதிர்வரும் பெரும்போகத்தில் அர்ப்பணிப்புடன் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்வு நெடோல்பிட்டிய பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தில் நேற்று (17) ஆரம்பமானது.

வழக்கமாக பெரும்போகத்தில் 8 இலட்சத்து 14 ஆயிரத்து 678 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிர் செய்கை மேற்கொள்ளப்படும்

2022/2023 காலப்பகுதி பருவத்திற்கான கடன் ஆவணங்களை, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று காலை கையளித்துள்ளார். 11 பேருக்கு தலா 50 ஆயிரம் படி விவசாய கடன்களை அமைச்சர் வழங்கியுள்ளார்.

விவசாய கூட்டுறவு வங்கி மூலம் முன்னோடி திட்டமாக இந்த கடன் உதவி வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு 2 இலட்சத்து 7 ஆயிரத்து 103 விவசாயிகளுக்கு, 7.1 பில்லியன் ரூபா இந்த கடனுதவிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆகஸ்ட் 2022 வரை 1 இலட்சத்து 54 ஆயிரத்து 641 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களில், 5.4 பில்லியன் ரூபா திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கம் 350 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...