Ranil Namal
இலங்கை

ரணிலுடன் நாமல் பேசியது என்ன?

Share

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.

இந்த நடவடிக்கைகளுக்கு, ரணில் விக்ரமசிங்கவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரணில் மற்றும் நாமலின் சந்திப்பு தொடர்பான காணொளி வெளியாகி இருந்தது.
குறித்த காணொளியானது பேசுபொருளாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
திருமண நிகழ்வு ஒன்றில் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்றது.

திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் பங்குபற்றியதுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

இந்த சந்தர்ப்பத்தில், நாமல் ராஜபக்சவுடன் ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் உரையாடும் விதம் கவனிப்புக்கு உள்ளாகியிருந்தது.

அந்த அடிப்படையில், ரணிலுடன் உரையாடிய விடயங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு பதிலளித்த நாமல் தற்போதைய அரசியல் செயற்பாடு குறித்து ரணில் கேள்வி எழுப்பியிருந்ததோடு
கிராமத்திற்கு கிராமம் வேலைத்திட்டத்துடன் நாடு முழுவதும் சென்று கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

அத்துடன், தனிப்பட்ட விடயங்களை குறித்தும் பேசப்பட்டதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...