போதுமானளவு ஒட்சிசன் கையிருப்பில் – சுகாதார அமைச்சு
கொரோனாத் தொற்றாளர்களுக்கு போதுமான ஒட்சிசன் நாட்டில் உள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்தார்.
கொரோனா நோயாளர்களுக்கு வழங்குவதற்காக தற்போது 300 தொன் ஒட்சிசன் சுகாதார அமைச்சிடம் உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, நாட்டுக்கு ஒட்சிசனைக் கொண்டுவருவதற்காக 2 கப்பல்கள் இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளன எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறினார்.
Leave a comment