AL Exam Bad Weather Grade 05 Scholarship
இலங்கை

பரீட்சை காலத்து இடர்களை அறிவிப்பதற்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள தொலைபேசி இலக்கங்கள்.

Share

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமானது, ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் மற்றும் உயர் தரப் பரீட்சைக் காலப்பகுதியில் இடர்கள் குறித்து அறிவிப்பதற்காக 5 புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

முப்படையினர் மற்றும் காவல்துறையினரின் தொடர்ச்சியான ஆதரவுடன் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படும் எனவும் நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

“அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் ஊடாக அனைத்து தரப்பினரையும் இணைத்து விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்கு முன்னரும், பரீட்சை முடிவுற்ற பின்னரும் இந்தத் திட்டம் செயற்படும்.

ஏதேனும் இடர் நிலைமை ஏற்பட்டால், பிள்ளைகளைப் பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், வினாத்தாள்களைக் கொண்டு செல்லும் போதும் மற்றும் அதிகாரிகளுக்குக் கடமைகளைச் செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

பரீட்சைக்கு முந்தைய நாள் 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்படும்.

அத்துடன் 117 என்ற தொலைபேசி இலக்கமும் செயற்பாட்டில் உள்ளது.

தொழில்நுட்ப அறிக்கைகள் 6 மணித்தியாலங்களுக்கு ஒரு முறையோ அல்லது 3 மணித்தியாலங்களுக்கு ஒரு முறையோ வழங்கப்படவுள்ளன.

முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து தொடர்ச்சியாக நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...