இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானுக்கு, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி கிடைப்பது உறுதியாகியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் இன்று இடம்பெற்றது. 37 எம்.பிக்கள் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதற்கு முன்னர் ஜீவன் தொண்டமான் இராஜாங்க அமைச்சராக செயற்பட்டார். எனினும், இம்முறை அவருக்கு இராஜாங்க அமைச்சு பதவி எதுவும் வழங்கப்படவில்லை.
விரைவில் நியமிக்கப்படவுள்ள நிரந்தர அமைச்சரவையில் இடமளிப்பதற்காகவே ஜீவனின் பெயர், இராஜாங்க அமைச்சர்களின் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்படவில்லை என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
#SriLankaNews
Leave a comment