gotabaya
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வகட்சி மாநாடு! – மலையக கட்சிகளும் புறக்கணிப்பு

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டை, புறக்கணிப்பதற்கு மலையக தமிழ்க் கட்சிகளும் தீர்மானித்துள்ளன.

இதன்படி ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி ஆகியன மாநாட்டில் பங்கேற்காதிருக்க தீர்மானித்துள்ளன.

அத்துடன், அரச பங்காளிக்கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் குறித்த மாநாட்டை புறக்கணிக்க தீர்மானித்துள்ளது.

நாளை மறுதினம் 23 ஆம் திகதி நடைபெறும் சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்குமாறு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த மாநாட்டில் பங்கேற்காதிருக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இந்நிலையிலேயே மலையக கட்சிகளும் புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...