நாடு வழமைக்கு திரும்பிய பிறகு எனது திருமணத்தை பற்றி யோசிக்கலாம் என நியுசிலாந்தின் இரும்பு பெண்மணி ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்.
வரும் பெப்ரவரி மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் திருமண ஏற்பாடுகளும் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளது.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
என் திருமணம் இப்போதைக்கு நடைபெறபோவதில்லை. இது தான் வாழ்க்கை. நாம் எதிர்பார்ப்பது எப்போதும் நடைபெறும் என்று சொல்ல முடியாது. எனக்கும் கொரோனாவால் வாடும் நியூசிலாந்து பொது மக்களுக்கும் வித்தியாசம் இல்லை.
பலர் கொரோனா காரணமாக வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். பலர் தாங்கள் விரும்பும் நபர்களிடம் பக்கத்தில் இருக்கும் வாய்ப்பு கூட இல்லாமல் இருக்கின்றனர்.
அவர்களிடம் நாம் அன்பு செலுத்த வேண்டும். மீண்டும் நாம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். அதன்பின் திருமணம் பற்றி யோசிப்பேன் – என்றுள்ளார்.
இந்த அறிவிப்பால் ஆர்டனின் குடும்பத்தவர் மட்டுமல்லாது நாட்டு மக்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னுக்கும் அவரது நீண்ட கால நண்பரான கிளார்க் கேபோர்ட்டுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்னா் நிச்சயதாா்த்தம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
#World
Leave a comment