அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணியின் பந்துவீச்சு மூலோபாய பயிற்றுவிப்பாளராக வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஒருநாள் மற்றும் டி:20 அணியின் முன்னாள் தலைவருமான லசித் மலிங்க, எதிர்வரும் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான தேசிய அணியின் ‘வியூக பந்து வீச்சு பயிற்சியாளராக’ நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது
இலங்கை கிரிக்கெட்டின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்து, இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழுவால் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 20 வரை அவரது நியமனம் அமலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
#SportsNews
Leave a comment