IMG 20211224 WA0015
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீடொன்றிலிருந்து பெருந்தொகை வெடிபொருட்கள் மீட்பு!

Share

தியத்தலாவை புற நகர்ப்பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிபொருட்களை, தியத்தலாவைப் பொலிஸார் (இன்று) 24-12-2021ல் மீட்டுள்ளனர்.

அத்துடன் வீட்டுரிமையாளரான ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

தியத்தலாவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாகர ரட்ணாயக்கவிற்கு கிடைத்த ரகசியத் தகவலொன்றினையடுத்து, அவர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விரைந்து குறிப்பிட்ட வீட்டை சுற்றி வளைத்து தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர்.

அவ்வேளையில், அங்கு சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் அடங்கிய பொதியைக் கண்டுபிடித்து, மீட்டனர்.

அவ் வெடிபொருள் பொதியில், ஆர்.பி.ஜி. ரக பயிற்சிக்கான வெடிகுண்டு – 01, 82 மோட்டார் ரக வெட் குண்டு – 01, டி. 56 எபோ ரக குண்டுகள் – 147, எம்.ஐ.எல்.எஸ். ரக கைக்குண்டு – 01, வெற்றுமெகசின் – 02, சன்னப்பெட்டி – 01, புகைக்குண்டு – 01, தலைக்கவசம் – 01, நீர்போத்தல் – 01 ஆகியன அடங்கியிருந்தனவென்று, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாகர ரட்னாயக்க கூறினார்.

மீட்கப்பட்ட வெடிபொருட்களுடன், வீட்டுரிமையாளரையும், பொலிசார் கைது செய்தனர்.

தியத்தலாவைப் பொலிசார் தொடர்ந்தும், மேற்படி விடயம் குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Shooting 4
இலங்கை

பெல்லன்விலவில் சற்றுமுன்னர் துப்பாக்கி பிரயோகம்.

பெல்லன்வில பகுதியில் சற்று நேரத்திற்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த, துப்பாக்கிச் சூட்டில்...

Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...