jaffna Protest
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கவனயீர்ப்பில் கொயிலாமனை மக்கள்!!

Share

கொடிகாமம் கொயிலாமனை மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இராமாவில் கிராமசேவகர் பிரிவு மற்றும் தாவளை இயற்றாளை கிராமசேவகர் பிரிவை எல்லைபடுத்தும் தெருவை, தனியார் சிலர் அடைத்து வைத்துள்ளமையால் மக்கள் குளத்திற்குள்ளால், தங்களுடைய பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மாணவர்கள் இடுப்பளவு நீரிற்குள்ளால் பாடசாலைக்குச் செல்கின்றனர்.

jaffna Protest 02

சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக பயண்படுத்திவரும் இவ்வீதியை தனியார் சிலர் அது தமது காணி எனத்தெரிவித்து குளத்துடன் இணைத்து வீதியையும் மறித்து வேலியையும் அடைத்துள்ளனர்.

குறிப்பாக தனியார் காணி உரிமையாளர்கள், வீதியை மறித்தும் குளத்தின் ஒருபகுதியை இணைத்தும் தமது எல்லையை வரையறுத்துள்ளனர்.

இதன்காரணமாக சுமார் 35 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வீதியானது சாவகச்சேரி பிரதேச சபை வீதி வரைபடத்தில் குறியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

jaffna Protest 01

இதனையடுத்து வீதிக்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி அப்பகுதிவாசிகள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...