யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு மீனவர்கள் மீன்பிடிப்படகு ஒன்றில் இந்திய எல்லைக்குள் அத்து மீறிப் பிரவேசித்ததாக குற்றம்சாட்டி இந்தியக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சிப் பகுதியில் இருந்து கடற்றொழிலிற்காக பயணித்த படகே இவ்வாறு இந்திய கரையோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குறித்த படகு தற்போது நாகை பட்டினம் துறைமுகத்திற்குகொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் இடம்பெறுவதாக இந்தியத் தரப்பு செய்திகள் தெரிவிப்பதோடு, நாளைய தினம் நீதிபதியின் முன்பாக ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வல்வெட்டித்துறை ஆதி கோவலடித் தெரு நிமலதாஸ், மற்றும் த. பெ தர்மராஜ் ஆகிய இருவருமே எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக நேற்று கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம் கடற்படை யால் வேதாரண்யம் கடலோர பாதுகாப்புக் குழு ஆய்வாளரிடம் ஒப்படைக்கபட்டனர்.
இவர்கள் எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment