accident 8 750x375 1
செய்திகள்இலங்கை

யாழ். வாகன விபத்தில் முதியவர் பலி !

Share

பால் விற்பனையில் ஈடுபட்டு முடித்து, வீடு திரும்பிய முதியவரொருவர் வீட்டு வாசலின் முன்பு இடம்பெற்ற வாகன விபத்தில் பலியாகியுள்ளார்.

இச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது .

யாழ்ப்பாணம் பொம்மை வெளியை சேர்ந்த 67 வயதான சின்னத்தம்பி சாந்தகுணமூர்த்தி எனும் நபரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் குறித்த நபர் வழமைபோன்று நேற்றைய தினமும் (12) பால் வியாபாரத்தில் ஈடுபட்டு முடித்த பின்னர் வீடு திரும்பியுள்ளார். இதன்போது வீட்டு வாசலின் முன்பாக வீதியை கடக்க முற்பட்ட வேளை யாழ்ப்பாணத்தை நோக்கி அராலியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார் .

முதியவரை விபத்திலிருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது முதியவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...