இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையுடன், இலங்கை அழகு ராணி புஷ்பிகா டி சில்வா வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றார் என கூறப்படும் தகவல் உண்மை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அழகு ராணி புஷ்பிகா டி சில்வா, தான் ரத்வத்தையுடன் சென்றேன் என தெரிவிக்கப்படும் தகவலில் உண்மை இல்லை எனவும், குறித்த குற்றச்சாட்டு பொய்யானது எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், புஷ்பிகா டி சில்வா வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றமை உண்மையென கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
லொஹான் ரத்வத்தையுடன் திருமதி புஷ்பிகா டி சில்வா வெலிக்கடை சிறைச்சாலையைப் பார்க்கச் சென்றார். இதில் சந்தேகமில்லை என கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.
லொஹான் ரத்வத்தையுடன், வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்ற குழுவில் அழகு ராணி ஒருவரும் இருந்தார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, “நான் அங்கு செல்லவில்லை. அந்தக் கதைகள் பொய்யானவை” என புஷ்பிகா டி சில்வா தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தான் பெண்ணுடன் வெலிக்கடை சிறைக்கு சென்றேன் என வெளியாகும் தகவலில் உண்மையில்லை என இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment