நாடாளுமன்றத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படப்போகிறதா? அல்லது பிரபாகரன் மீண்டும் வரப்போகிறாரா? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு பயணிக்கும் பாதையில் 21 இடங்களில் இன்று சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
அதில் 10 சோதனைச் சாவடிகளில் தமது வாகனம் பரிசோதிக்கப்பட்டது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதிகளவான சோதனைச் சாவடிகள் திடீரென அமைக்கப்பட்டதால் தான் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் நாடாளுமன்றத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படப்போகிறதா? அல்லது பிரபாகரன் மீண்டும் வரப்போகிராறா? ஏன் அமைச்சர் சரத் வீரசேகர இத்தனை சோதனைச் சாவடிகளை அமைக்க வேண்டும் என்று அவர் சபாநாயகரிடம் கேள்விகளைத் தொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment