வடகொரியா மீதான முக்கிய பொருளாதார தடைகளை விலக்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனாவும், ரஷ்யாவும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இத்தீர்மானத்தைக் கொண்டுவர இருக்கின்றன.
வடகொரியா முதன்முதலாக 2006 ஆம் ஆண்டு அணுக்குண்டு சோதனை நடத்தியபோது ஐ.நா. பாதுகாப்பு சபையில் வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது.
அதற்குப் பின்னர் வடகொரியா தொடர்ந்தும் ஏவுகணை சோதனைகளை பரிசோதித்தமையால் பொருளாதாரத் தடைகளை மேலும் விதிக்கப்பட்டன.
இதன் காரணமாக அந்நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவலைத்தடுக்க அந்த நாடு தனது எல்லைகளை மூடி வைத்திருப்பதால் உணவுப்பொருட்கள் வினியோகச்சங்கிலி முறிபட்டுள்ளது.
இதனால் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பொதுமக்கள் குறைவாக சாப்பிட வேண்டும் என்று வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் இவ்வாறான நெருக்கடி நிலையில் இருந்து வடகொரியாவைக் காப்பாற்றும் விதமாக, வடகொரியா மீதான முக்கிய பொருளாதாரத் தடைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொருளாதார வல்லரசு நாடுகளான சீனாவும், ரஷ்யாவும் கூட்டாக குரல் கொடுத்துள்ளன. இது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளன.
முக்கிய பொருளாதார தடைகள் விலக்கப்பட்டால், வடகொரியாவில் இருந்து கடல் உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியப் பொருட்கள் இறக்குமதி, வெளிநாட்டில் வேலை செய்யும் வடகொரிய நாட்டினர் தங்கள் வருவாயை வீட்டுக்கு அனுப்புவதற்கான தடை வரை அகலும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
#world
Leave a comment