ஐ.நாவின் மாநாட்டில் காலநிலை தொடர்பான இந்தியாவின் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஐ.நா மாநாட்டில் காலநிலை மாற்றம் தொடர்பான படிம எரிபொருள் பயன்பாட்டின் குறைப்பு தொடர்பாக இந்தியாவால் முன்வைக்கப்பட்ட கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் புபேந்தர் யாதவ் கருத்து தெரிவிக்கையில்,
”காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர் படிம எரிபொருளின் பயன்பாட்டினால் தான் உலகின் சில நாடுகள் பொருளாதாரத்திலும், நல்வாழ்விலும் மேன்மை பெற்றுள்ளன எனவும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அதற்குரிய துறையை மட்டும் குறை சொல்லவது நியாயமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்தோடு சர்வதேச நாடுகள் தனது சூழல், வலிமை, பலவீனம் ஆகியவற்றின் அடிப்படையில் கரியமில வாயு வெளியேற்றத்தையும் சுத்திகரிப்பையும் சமநிலையில் வைத்திருக்க வேண்டிய கட்டயத்தில் இருக்கின்றோம். .
இவ்வாறு வளரும் நாடுகள் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் அதேநேரம், தங்கள் நாட்டில் வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களையும் வகுக்க வேண்டிய முக்கிய கட்டுப்பாட்டில் உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#india
Leave a comment