india 3
செய்திகள்விளையாட்டு

இந்தியாவின் டெஸ்ட் அணி அறிவிப்பு!!

Share

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது . இந்தியாவுடன் 2 டெஸ்டுகள், 3 T20 ஆட்டங்களில் நியூசிலாந்து விளையாடுகிறது.

T20 தொடர் கார்த்திகை 17 அன்று தொடங்கி, கார்த்திகை 21 அன்று நிறைவுபெறுகிறது.

டெஸ்ட் தொடர் கார்த்திகை 25-ல் தொடங்கி, மார்கழி 7 அன்று நிறைவுபெறுகிறது.

T20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் தமிழக வீரர் அஸ்வின் இடம்பெற்றுள்ளார்.

கோலி, ஜடேஜா, பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை அணியில் இடம்பெற்ற பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, ராகுல் சஹார், ஷர்துல் தாக்குர் இடம்பெறவில்லை.

சுழற்பந்து வீச்சாளர் சஹால் மீண்டும் தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் டெஸ்டில் விராட் கோலி விளையாடாததால் ரஹானே தலைமையில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

2-வது டெஸ்டில் விராட் கோலி அணியினருடன் இணைந்து கேப்டனாகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது

. ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், பும்ரா, ஷமி ஆகியோர் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. புஜாரா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முதல் டெஸ்ட் கான்பூரில் நவம்பர் 25 அன்றும் 2-வது டெஸ்ட் மும்பையில் டிசம்பர் 3 அன்றும் தொடங்குகின்றன.

இந்திய டெஸ்ட் அணி விபரங்கள்

ரஹானே (அணித்தலைவர் ), கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா (துணை அணித்தலைவர்), ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர், சஹா (விக்கெட் காப்பாளர் ), கே.எஸ். பரத் (விக்கெட் காப்பாளர் ), ஜடேஜா, ஆர். அஸ்வின், அக்‌ஷர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, விராட் கோலி (2-வது டெஸ்டில் விளையாடி அணிக்குத் தலைமை தாங்குவார்).

#SPORTS

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 பிரதான பரீட்சை திகதிகளில் மாற்றமில்லை: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உறுதி!

2026-ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில், கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் சாதாரண தரப்...

Untitled 7
செய்திகள்உலகம்

ஈரானியர்களுக்குத் தடை விதித்தது எமிரேட்ஸ்: ஐக்கிய அரபு அமீரகப் பயணக் கட்டுப்பாடுகள் தீவிரம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், துபாயைத் தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் (Emirates) வானூர்தி...

Untitled 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாணவர்களின் கல்விச் சூழலுக்கு அச்சுறுத்தல்: கந்தளாய் பேராறு பாடசாலை முன்பாகக் கொட்டப்படும் கோழிக் கழிவுகள்!

திருகோணமலை, கந்தளாய் பேராறு அல்-தாரிக் கனிஷ்ட வித்தியாலயத்திற்கு முன்பாகச் சட்டவிரோதமான முறையில் கோழிக் கழிவுகள் மற்றும்...

Untitled 5
உலகம்செய்திகள்

ஈரான் அதிரடி எச்சரிக்கை: அப்பிள் மற்றும் மைக்ரோசொப்ட் உள்ளிட்ட 18 அமெரிக்க நிறுவனங்கள் இலக்கு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இயங்கி வரும் அப்பிள் (Apple), மைக்ரோசொப்ட் (Microsoft) மற்றும் கூகுள் (Google)...