BO scaled
செய்திகள்இலங்கை

குருநகர் மீனவர் மீது இந்திய படகு தாக்குதல்!

Share

இலங்கை கடற்தீவில், இந்திய இழுவைப் படகு, குருநகர் படகு மீது மோதியதுடன், படகில் இருந்தோர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைமீன்பிடிப் படகு, குருநகர் பகுதி மீனவ படகினை நேராக மோதி சேதப்படுத்தியதோடு, அப்படகில் வந்தவர்கள், மற்றைய படகில் இருந்த குருநகர் மீனவர்களை கடலில் தூக்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநகர் பகுதியில் இருந்து மீன்பிடி தொழிலுக்காக ஒரு படகில் மூவர் நேற்று 12 மணியளவில் கடலுக்குச் சென்றிருந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் இலங்கை கற்கடதீவு கடல் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய மீன்பிடி ரோலர், இலங்கை மீன்பிடிப் படகினை நேராக மோதி படகினை சேதப்படுத்தியதோடு, படகில் இருந்த மூவரையும் தாக்கி கடலில் தூக்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதனால் குறித்த படகு முழுமையாக சேதம் அடைந்துள்ளதோடு, படகில் பயணித்தவர்கள் காயங்களோடு கரை ஒதுங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்திற்கு, குருநகர் மீனவ சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...