Andhra Pradesh Murder
இந்தியாசெய்திகள்

கணவனின் தலையை வெட்டியெடுத்து பொலிஸ் நிலையம் சென்ற பெண்!!!

Share

கணவனின் கழுத்தறுத்து மனைவி கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் இடம்பெற்றுள்ளது.

ஆந்திரப்பிரதேசம்- சித்தூர் மாவட்டத்தில் உள்ள ரேனிகுண்டா கிராமத்தில் குடும்பப் பிரச்சினை காரணமாக, கணவனை மனைவி கழுத்தறுத்துக் கொலை செய்துள்ளார்.

ரேனிகுண்டா கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 53) மற்றும் அவரது மனைவி வசுந்தரா (வயது 50).

குறித்த தம்பதியிடையே கடந்த சில நாட்களாக பிரச்சினை நீடித்ததாகவும், அவர்களிடையே வாக்குவாதம் முற்றியதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவனை, மனைவி கழுத்தறுத்துக் கொலை செய்துள்ளதுடன், கணவனின் தலையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இரத்தக் கறைகளுடன் குறித்த பெண் செல்வதை அவதானித்த அயலவர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கொலையாளி மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்பதை கண்டறிந்துள்ளனர். அத்துடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை குறித்த தம்பதிக்கு 20 வயதில் மகன் உள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5 1
உலகம்செய்திகள்

காசா மீது வீசப்பட்ட 230 கிலோ குண்டு! இஸ்ரேலின் போர்க்குற்றம் அம்பலம்

காசாவில் பிரபல கடற்கரை விடுதி ஒன்றில் இஸ்ரேல் MK-82 என்ற 230 கிலோ எடை கொண்ட...

4 1
இலங்கைசெய்திகள்

செம்மணியில் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்: அரசு தரப்பின் அதிரடி அறிவிப்பு

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில்...

1
உலகம்செய்திகள்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : கனடாவில் இருந்து வந்த கோரிக்கை

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும், பொறுப்புக்கூறல்...

3 1
உலகம்செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்.. பிரித்தானிய எம்பி கோரிக்கை

கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய...