கர்நாடகா- ஹாசனில் பொது இடமொன்றில் யுவதி ஒருவரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட இளைஞன் ஆடைகள் களையப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.
கட்டடத் தொழிலாளியாக பணிபுரியும் மேகராஜ் என்ற குறித்த இளைஞன், ஹாசன் நகரில் உள்ள மகாராஜா பூங்காவிற்கு மதுபோதையில் சென்றுள்ளார்.
அங்கிருந்த யுவதியிடம் தவறாக நடப்பதற்கு முயன்றார் என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து குறித்த பெண் கூச்சலிட்டமையைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த கர்நாடகா பிரஜா சக்தி அமைப்பின் மாவட்டத் தலைவர் பிரவீன் கவுடா என்பவரும் மற்றும் சிலரும் இணைந்து இளைஞனைத் தாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் அறிந்த வந்த பொலிஸார் இளைஞனைத் தாக்கிய பிரவீன் கவுடா உட்பட 10 பேர் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
#IndiaNews
Leave a comment