சூனியக்காரி என்று கூறி மூதாட்டியை அடித்து, துன்புறுத்தி, தீ வைத்து கொளுத்திய சம்பவம் ஜார்க்கண்டில் பதிவாகியுள்ளது.
ஜார்க்கண்ட்- சிம்டெகா நகரின் தீத்தைடேஞ்சர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஜாரியோ தேவி (வயது 60). புளோரன்ஸ் டங்டங் என்பவரின் மனைவியின் இறுதி சடங்கு விருந்தில் கலந்து கொண்டார்.
இதற்குப் பின்னர், ஜாரியோவை சூனியக்காரி என கூறியதுடன், அவரது மனைவி மரணத்திற்கு ஜாரியோவே காரணம் என புளோரன்ஸ் கூறியதாகவும், இதனைத்தொடர்ந்து, குறித்த மூதாட்டியை அடித்து, துன்புறுத்தியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் குறித்த மூதாட்டி மீது தீ வைத்து கொளுத்தியுள்ளார். இதனையடுத்து, கிராமவாசிகள் மூதாட்டியை மீட்டதுடன் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் ஐவரைக் கைது செய்துள்ளனர்.
#SrilankaNews
Leave a comment