Death 3
செய்திகள்இந்தியா

இறுதிச்சடங்கின் போது உயிரிழந்தவர் கண்விழித்தமையால் அதிர்ச்சி (வீடியோ)

Share

உயிரிழந்த நபரின் உடலுக்கு சுடுகாட்டில் தீ வைப்பதற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில் அவர் திடீரென கண் விழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் நரேலா பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. 62 வயதான சதீஷ் பரத்வாஜ் என்பவர் நேற்று முன் தினம் உயிரிழந்தார் என குடும்பத்தார் தெரிவித்து, பின்னர் அவரின் சடலத்திற்கு இறுதிச்சடங்கு செய்தனர்.

இதை தொடர்ந்து அவரது சிதைக்கு தீ வைப்பதற்கு சில நாழிகையில் அவர் கண்விழித்துள்ளார்.

பின்னர் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில்,

குறித்த நபர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சில காலமாகவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு வெண்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் வெண்டிலேட்டரில் இருந்து அவரை எடுத்தவுடன் மூச்சு விடுவதை நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து சதீஷ் இறந்துவிட்டதாக குடும்பத்தார் கருதியுள்ளனர். மருத்துவமனையின் அறிவுறுத்தலை கேட்காமலேயே அவர் உயிரிழந்துவிட்டார் என நினைத்து அழைத்து வந்துள்ளனர் என கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என பொலிஸார் கூறியுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
marriage5872 1667871504
இந்தியாசெய்திகள்

40 நாட்களில் 150 திருமணங்கள் ரத்து; சமூக ஊடகங்களே பிரதான காரணம்!

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் கடந்த 40 நாட்களில் மட்டும் சுமார் 150 திருமணங்கள்...

Tamil News lrg 4107099
இந்தியாசெய்திகள்

தொழில்நுட்பத் திருமணம்: கனடா மணமகன் – இந்திய மணமகள்; இணையவழியில் நடந்த வியப்பான நிச்சயதார்த்தம்!

நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் கனடாவில் இருக்கும் மணமகனுக்கும், இந்தியாவில் இருக்கும் மணமகளுக்கும் இணையவழியில் (Online) நிச்சயதார்த்தம்...

115171512 110522371 gettyimages 903375720 1
இந்தியாசெய்திகள்

இரத்த மாற்று சிகிச்சை பெற்ற 6 குழந்தைகளுக்கு HIV தொற்று உறுதி!

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம், சாட்னா (Satna) மாவட்ட மருத்துவமனையில் தலசீமியா நோய்க்காக இரத்த மாற்று...

24 663887579e266
இந்தியாசெய்திகள்

மது அருந்தப் பணம் இல்லாததால் 2 மாதக் குழந்தையை ரூ. 2.4 லட்சத்திற்கு விற்பனை செய்த தாய்: ஐதராபாத்தில் அதிர்ச்சி!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான தாய் ஒருவர், மது வாங்கப்...