Egg 1
இந்தியாசெய்திகள்

சத்துணவில் பழுதடைந்த முட்டைகள்!!

Share

இந்தியா- தமிழகத்தில் பாடசாலையில் வழங்கப்படும் சத்துணவில் கெட்டுப்போன முட்டைகள் இருந்த விவகாரத்தில் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை அடுத்த நாகனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பாடசாலையில், மாணவர்களுக்கு சத்துணவில் வழங்கப்படும் முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இதனுடைய அடிப்படையில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இன்று சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அங்குள்ள உணவுப் பொருட்கள் மற்றும் இருப்பு உள்ள முட்டைகளின் தரம் ஆகியவை குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைத்து உணவுப் பொருட்களும் நல்ல நிலையில் உள்ளது என்றும், முட்டைகள் தண்ணீரில் இட்டு பரிசோதிக்கப்பட்டதாகவும் அவை அனைத்தும் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும் கடந்த வாரம் வாங்கப்பட்ட முட்டைகளை உரிய காலத்தில் அளிக்காமல், பழுதடைந்த முட்டைகளை பாடசாலையில் வைத்திருந்தமை கண்டறியப்பட்டது.

இதையடுத்து பாடசாலையின் சத்துணவு அமைப்பாளர் தேன்மொழி, சமையல் பணியாளர் இலட்சுமி மற்றும் பாடசாலைத் தலைமை ஆசிரியை தனலட்சுமி ஆகியோரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1647574276 3019
செய்திகள்இந்தியா

பகவத் கீதையின் செய்தியை உலகமயமாக்கும் முயற்சி: 50க்கும் மேற்பட்ட தூதரகங்கள் மூலம் முன்னெடுக்கப்படுகிறது!

பகவத் கீதையின் செய்தியை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் நோக்கில், இந்திய வெளிவிவகார அமைச்சகம் முயற்சிகளை...

images 3 1
செய்திகள்இந்தியா

இந்தியக் குடியுரிமை கோரி மனு: 2 மாதங்களுக்குள் பரிசீலிக்க மத்திய அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு!

திருச்சி, கொட்டப்பட்டு மறுவாழ்வு முகாமில் வசிக்கும் ஒரு குடும்பத்துக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்து இரண்டு...

500x300 20809002 tvkvijay29102025
செய்திகள்இந்தியா

வீட்டுக்கு நிரந்தர வீடு, உந்துருளி: மக்கள் சந்திப்பில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தலைவர் விஜய் உறுதி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு...