ஒமைக்ரோன் எதிரொலி: ஊரடங்கு அறிவிப்பு

curfew

கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவினை மாநில அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரோன் வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெங்களூருவில் இன்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், நிபுணர்கள் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது கொரோனா பரவலைத் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கொரோனா பரவுவதற்கு வாய்ப்புள்ளதால் எதிர்வரும் 28 ஆம் திகதியில் இருந்து 10 நாட்கள் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து எதிர்வரும் 28 ஆம் திகதி இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.

கர்நாடக அரசின் இந்த உத்தரவு காரணமாக பெங்களூரு உட்பட கர்நாடக மாநிலம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

#IndiaNews

Exit mobile version