Rasi Palan new cmp 8 scaled
இந்தியா

​இன்றைய ராசி பலன் 16.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Share

​இன்றைய ராசி பலன் 16.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஏப்ரல் 16, 2024, குரோதி வருடம் சித்திரை 3, செவ்வாய்க் கிழமை, சந்திரன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிக ராசியில் உள்ள அனுஷம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதக மன்ற நாளாக இருக்கும். உங்களின் எண்ணம், செயலில் முழு கவனம் தேவை. பணியிடத்தில் கவனமாக செயல்படவும். உங்கள் அன்றாட வேளையில் திட்டமிட்டு செயல்படவும். நிதி ரீதியாக இன்று கடினமான சூழல் நிலவும். செலவுகளை கட்ட படுத்த வேண்டிய நாள். இன்று முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. நீங்கள் எடுக்கும் முயற்சியில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பணத்தை சேமிப்பதில் அக்கறை காட்டவும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் பெரிய வெற்றியை பெறுவீர்கள். நிதி நன்மைகளை பெறுவீர்கள். இன்று குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டிய நாள். கோபத்தை தவிர்த்து நிதானமாக செயல்படவும். அலுவலக அரசியல் இருந்து விலகி இருக்கவும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு வரன் அமையக்கூடிய நாள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். உங்களின் இலக்குகளை அடைய ஆரோக்கியம் சாதகமாக இருக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். உங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். மேம்படக்கூடிய நாள். குடும்பத்திற்காக அதிக செலவு செய்ய வேண்டிய சூழல் இருக்கும். ஆரோக்கியம் சார்ந்த விஷயத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் தேவை. பணியிடத்தில் சக ஊழியர்களுடன் உங்களின் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். இன்று உங்களின் பிரச்சனைகள் தீர்க்க குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களை சுற்றி உள்ளவர்களுடன் நல்லுறவை வேண்டிய நாள்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் வேலையில் சிரமங்களை சந்திக்க நேரிடும். குடும்பம், வேலையில் உள்ள பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். முதலீடு விஷயத்தில் கவனமாக செயல்படவும். இன்று சோர்வு, உடல்நல பிரச்சனை உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள நேரிடும். காதல் உறவில் கவனம் தேவை. இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணத்தை செலவிடுவீர்கள்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். வேலைகள் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புதிய வழிகளை ஆராய வேண்டியது இருக்கும். முதலீடுகளில் சிறப்பு கவனம் செலுத்தவும். சரியாக பணத்தை நிர்வகிக்க வேண்டிய நாள். காதல் விஷயத்தில் சற்று சவாலான சூழல் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இனிமையான நேரத்தை அனுபவிக்க வாய்ப்பு உள்ளது. இன்று எதிர்காலம் குறித்து அதிகம் யோசிப்பீர்கள்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக உங்களுக்கு இருக்கும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, பாராட்டு கிடைக்க வாய்ப்புள்ளது. சொத்து தொடர்பான விஷயத்தில் சாதக சூழல் நிலவும். உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். இன்று நீங்கள் எடுக்கக்கூடிய எந்த ஒரு முயற்சியிலும் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். இன்று உங்கள் வாழ்க்கையில் நல்ல வெற்றிகளை அடைய வாய்ப்புள்ளது.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சாதகமான நாள். வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்களில் ஒன்றாக அமையும். நிறைவேறாத கனவுகள் நிறைவேற வாய்ப்புள்ளது. மன மகிழ்ச்சியை அடையக்கூடிய நாள். இன்று உங்களின் வேலைகளை முடிப்பதில் ஆரோக்கியம் சிறப்பாக கை கொடுக்கும். குடும்பம், பண உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். வேலையில் வெற்றி பெற தன்னம்பிக்கையுடன் உழைக்க வேண்டிய நாள். இன்று உங்களின் ரகசியங்களை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உங்கள் வேலையில் கவனமாக செயல்பட நிதின் நன்மைகளை பெறுவீர்கள். உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். உற்றார் உறவினர்களுடன் வாக்கவாதங்களை தவிர்க்க வேண்டும். அரசியலில் உள்ளவர்கள் இன்று எந்த ஒரு பெரிய விஷயத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பொழுது போக்கிற்காக அதிக பணம் செலவிட நேரிடும். திருமண வாழ்க்கையில் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நற்பலன்கள் அதிகமாக கிடைக்கும். உங்களின் விருப்பங்களை நிறைவேற்ற வாய்ப்புகள் அமையும். தொழில் தொடர்பான விஷயத்தில் புதிய வாய்ப்புகளும், லாபமும் கிடைக்கும். இன்று தேவையற்ற விவாதங்கள், சலசலப்புகள் இருக்கும். அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்கள் அல்லது காதலியுடன் நேரத்தை செலவிட விட அற்புத வாய்ப்பு கிடைக்கும். சரியான நேரத்தில் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கவும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று அனுகூலமான பலன்கள் கிடைக்க, கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். பணியிடத்தில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். வேலையில் சற்று கவனமாக இருக்க வேண்டிய நாள். முதலீடு செய்யும் முன் சிந்தித்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவழிக்க வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இனிமையான பயணம் செல்ல வாய்ப்புள்ளது. உங்களின் தொழில் மற்றும் பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதனால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக செயல்படுவது நல்லது.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக அமையும்.. உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சில அற்புத பலன்களை பெறுவீர்கள். இன்று உங்களின் நிறைவேறாத ஆசைகள் நிறைவேற வாய்ப்புள்ளது. இதனால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பின் முன்னேற்றம் காணக்கூடிய நாள். உங்களின் சிறப்பான செயல்பாடுகளால் மரியாதை அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் புரிதல் நன்றாக இருக்கும்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று இன்று மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய நாள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் நிதிய இழப்புகளை சந்திக்கின்ற இடம். இன்று உங்களின் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எந்த ஒரு சூழலிலும் சச்சரவுகளில் இருந்து விலகி இருக்கவும். திருமண வாய்ப்புகள் தேடி வரும். வண்டி வாகனத்திற்காக செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Share
தொடர்புடையது
puthiyathalaimurai 2024 01 760c263d 5433 4158 8378 13068b38fb78 river
இந்தியாசெய்திகள்

புதுடெல்லி கடும் பனிமூட்டம்: 100 விமானங்கள் ரத்து, ரயில் சேவைகள் பாதிப்பு!

புதுடெல்லி உட்படப் பல்வேறு வட மாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவி வருவதால், அதிகாலை மற்றும்...

1763436612 MediaFile 1
இந்தியாசெய்திகள்

அரியானாவில் கடுமையான மூடுபனி: 35+ வாகனங்கள் மோதல் – பலர் படுகாயம்!

இந்தியாவின் அரியானா மாநிலத்தில் இன்று காலை வீதிகள் தெரியாத அளவுக்கு அடர்ந்த மூடுபனி சூழ்ந்த காரணத்தினால்,...

kidney 2025 02 64c4dfaad03050762c0097e951e0a6ec 3x2 1
இந்தியாசெய்திகள்

சிறுநீரக செயலிழப்பு: இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 இலட்சம் பேர் உயிரிழப்பு – 7 கோடி மக்கள் நாள்பட்ட நோயால் அவதி!

இந்தியாவில் ஆண்டுக்கு இரண்டரை இலட்சம் பேர் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள்...

New Project 2025 12 13T072001.961
இந்தியாசெய்திகள்

இலங்கையில் அமெரிக்காவின் 3 முக்கிய இலக்குகள்: சீனச் செல்வாக்கைக் கட்டுப்படுத்துதல், பொருளாதார மறுசீரமைப்பிற்கு ஆதரவு – தூதுவர் எரிக் மேயர் சாட்சியம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் இலங்கைக்கான புதிய தூதுவராகப் பரிந்துரைக்கப்பட்ட எரிக் மேயர், செனட் வெளிவிவகாரக்...