USA 1
செய்திகள்உலகம்

இந்திய பாகிஸ்தான் எல்லைகள் ஆபத்தானவை -அமெரிக்கா

Share

இந்திய பாகிஸ்தான் எல்லைகள் ஆபத்தானவை என அமெரிக்கா சுற்றுலா பயணிகளுக்கு எச்சரித்துள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளுக்குச் செல்வதை தவிா்க்கும் படி தங்கள் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதில் இந்தியாவுக்கு இரண்டாம் நிலையும், பாகிஸ்தானுக்கு மூன்றாவது நிலையும் எச்சரிக்கையாக இருக்கிறதென அந்நாட்டு தெரிவித்துள்ளது.

இது தொடா்பில் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் ,

‘பாகிஸ்தானின் பலுசிஸ்தான், கைபா் ஆகிய மாகாணங்களுக்கும், பழங்குடியினா் பகுதிகளுக்கும் செல்வதைத் முற்றாக தவிா்க்க வேண்டும்.

அங்கு தீவிரவாதம், ஆள்கடத்தல், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் தீவிரவாதத்தால் எந்நேரமும் ஆயுத மோதல் ஏற்படலாம்.

அத்தோடு தீவிரவாத குழுக்கள் பாகிஸ்தானில் தொடா்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன எனவும் அப்பாவி மக்கள், இராணுவத்தினா், பொலிஸார் மீது உள்ளூா் கிளா்ச்சியாளா் குழுக்கள் தாக்குதல் நடத்துகின்றன.

அமெரிக்க அதிகாரிகள்மற்றும் பயணிகள் மீது முன்பும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

2014 முதல் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையால் நிலைமை சற்று மேம்பட்டுள்ளது.

குறிப்பாக இஸ்லாமாபாதில் தீவிரவாத அச்சுறுத்தல் குறைவாக உள்ளதால் அங்கு தாக்குதல்களும் குறைந்துள்ளன’ என்று தெரிவித்துள்ளது.

இது போன்று ‘இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம், உள்ளூா் அமைதியற்ற நிலை நிலவுவதாலும், இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் 10 கி.மீ.க்குள் ஆயுத மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாலும் அங்கு பயணம் மேற்கொள்வதை முற்றாக தவிா்க்க வேண்டும்.

அத்தோடு இந்தியாவில் பாலியல் வன்கொடுமை, குற்றச் சம்பவங்கள் சுற்றுலாப் பகுதிகளில் நடைபெறுவது அதிகரித்து வருவதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கிழக்கு மகாராஷ்டிரம், வடக்கு தெலங்கானா, மேற்கு வங்கத்தின் மேற்கு பகுதி ஆகியவற்றில் அவசர சேவைகள்தங்களால் வழங்க முடியாதுள்ளதாகவும் உள்ளது.

ஆகையால் இவ் இரு நாடுகளுக்கும் தன்னுடைய மக்கள் செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளது.

#WORLD

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...