2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடாத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவது தொடர்பில்
தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச ரீதியில் மிகவும் பிரபலமான போட்டியாக ஒலிம்பிக் போட்டியுள்ளது.
ஒலிம்பிக் போட்டியை இந்தியா இதுவரை நடத்தியதில்லை.
ஆனால் ஒலிம்பிக் போட்டியை நடாத்திய நாடு என்ற பெருமையைப் பெற்றுக்கொள்வதற்காக, இந்தியா பல முறை முயற்சிகளை
மேற்கொண்டு தோல்வி கண்டது.
இந்நிலையில், 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடாத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா நேற்று வழங்கிய நேர்காணலொன்றில் இவ்வாறு
கூறியுள்ளார்.
‘2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தால் ஆரம்ப விழாவை எங்கு நடத்துவீர்கள் என்று கேட்டால் நிச்சயம்
அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை நோக்கி தான் கையை நீட்டுவேன்.
இந்தியாவில் ஒலிம்பிக் ஆரம்ப விழாவுக்கு இதை விட பொருத்தமான இடம் இருக்க முடியாது.
தொடக்க விழா நடக்கும் ஸ்டேடியத்தில் தான் தடகள போட்டிகளும் நடைபெறும்.
அதற்கும் சரியான இடமாக இது இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment