அரிசி ஏற்றுமதிக்கு திடீர் தடை விதித்த இந்தியா
இந்தியாசெய்திகள்

அரிசி ஏற்றுமதிக்கு திடீர் தடை விதித்த இந்தியா

Share

அரிசி ஏற்றுமதிக்கு திடீர் தடை விதித்த இந்தியா

உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் ரத்தாகி, பல நாடுகளுக்கு உணவு நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில், இந்தியா அரிசி ஏற்றுமதிக்கு திடீரென்று தடை விதித்துள்ளது.

இருப்பினும் குறிப்பிட்ட நாடுகளுக்கு இந்த ஏற்றுமதி தடையில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்லது. உலகின் அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதத்தை கொண்டுள்ள இந்தியா சுமார் 140 நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா நாடுகள் அரிசியை பெருமளவில் ஏற்றுமதி செய்து வருகின்றன. கடந்த 2022ல் உலக அரிசி ஏற்றுமதி என்பது 5.54 கோடி டன்களாக இருந்தது.

அதில் 2.22 கோடி டன்கள் இந்தியாவில் இருந்து மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் பாசுமதி அல்லாத அரிசி 1.8 கோடி டன்கள். இந்த 1.8 கோடி டன்னில் 1.03 கோடி டன் வெள்ளை அரிசி.

இதுவே தற்போது அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் உள்ளிட்ட அரிசி உணவை பயன்படுத்தும் மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இது இவ்வாறிருக்க, உணவுப் பாதுகாப்புத் தேவைகளின்கீழ் இந்திய அரசாங்கத்தால் அனுமதிக்கப்படும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தடையில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, உணவுப் பாதுகாப்புக்கான தேவை உள்ள நாடுகள் என்ற அடிப்படையில் இந்திய அரசு எந்த நாடுகளுக்கெல்லாம் அனுமதியளிக்கிறதோ, அந்த நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதியை மேற்கொள்ள எந்தத் தடையும் இல்லை.

மேலும், தடை உத்தரவு வெளியான காலகட்டத்தில் கப்பல்களில் ஏற்றப்பட்ட சரக்குகளை ஏற்றுமதி செய்வதற்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பாஸ்மதி அரிசிக்கு திரும்புவார்கள் என இந்திய அரசாங்கம் கருதுகிறது.

ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்றே பெரும்பாலான மக்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் அரிசி ஏற்றுமதியில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியின் பங்கு 25% என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...