தமிழகத்தின் 9 மாவட்டங்களில் என்ஐஏ சோதனை
இந்தியாசெய்திகள்

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் என்ஐஏ சோதனை

Share

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் என்ஐஏ சோதனை

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், நெல்லை, கோயம்புத்தூர், மதுரை உள்ளட்ட 9 மாவட்டங்களில், 15க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நெல்லையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தின் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் தூண்டில் விநாயகம் பேட்டையைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 45).

முன்னாள் பாமக செயலாளரான இவர் கடந்த 2019ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த திருவிடைமருதூர் பொலிசார் பலரை கைது செய்தனர், பின்னாளில் இந்த வழக்கு என்ஐஏக்கு மாற்றப்பட்டது.

அவர்கள் விசாரணை நடத்தி வந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் சார்ந்த எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் சோதனை நடந்தது.

இதில் பல ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்ற நிலையில், தற்போது சோதனை நடத்தி வருவது பரபரப்பை அதிகரித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vijay sad
இந்தியா

முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுக பதிலடி !

கரூருக்கு சென்ற தமிழக முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்வில், திமுகவை குறித்து கடுமையான விமர்சனங்களினை...

friends drinking
இந்தியா

தமிழ் நாட்டில் மது அருந்தும் பெண்கள் இத்தனை பேரா?

  இந்திய மாநில அரசுகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக மது உள்ளதுடன், மதுபானங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...