IMG 20211024 WA0307
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சட்டவிரோத மண் அகழ்வு – குடாரப்பில் போராட்டம்

Share

மேய்ச்சல் தரைகளும் விவசாய நிலங்களும் களிமண் அகழ்வு மூலம் நாசப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் குடாரப்பு பகுதியில் இடம்பெற்றது.

நாகர்கோவில் தெற்கு, குடாரப்பு கிராமத்தில் விவசாய நிலங்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான காணிகளில் சட்டவிரோதமாகவும், அனுமதி வழங்கப்பட்டும் மண் அகழ்வு இடம்பெற்று வருகிறது.

மருதங்கேணி பிரதேச செயலகத்தால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு மண் அகழ்வு திட்டமிட்ட வகையில் இடம்பெறுகிறது. இது அரச காணிகள் அல்ல. தனியாருக்குச் சொந்தமான தோட்டக்காணிகளாகும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சொந்தமான காணிகளிலும் இவ்வாறு களிமண் அகழ்வு இடம்பறுகிறது.

இவை அனைத்தையும் கவனத்தில் கொள்ளாது மருதங்கேணி பிரதேச செயலாளர் அனுமதிப்பத்திரத்தை வழங்கியுள்ளதாகவும், இதற்கு அரசியல்வாதிகள் சிலரும் உடந்தையாக உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அனுமதிப்பத்திரத்துடன் உழவியந்திரங்களில் களிமண் அகழ்வில் ஈடுபட்டபோது அப்பகுதி மக்கள் தமது எதிர்பை வெளிப்படுத்தியதன் காரணமாக தற்காலிகமாக களிமண் அகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது.

அப் பகுதியில் களிமண் அகழ்வினால் பாரிய கிடங்குகள் ஏற்பட்டு நீர் தேங்குமிடமாக காணப்படுகிறது. குறித்த பகுதியினை மழை காலங்களில் கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரையாக விவசாயிகள் பயன்படுத்தும் மேய்ச்சல் தரையும் மண் அகழ்வினால் அழிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தினர்

அத்துடன் இக் காணிகள் பாரியளவில் மண் அகழப்பட்டு அருகில் உள்ள அணைகளால் உவர் நீர் விவசாய நிலங்களுக்குள் உட்புந்து வயல் நிலங்கள் உவராகி வயல் விதைப்புக்களையும் செய்ய முடியாது கைவிட்டுள்ளனர்.

எனவே தமது விவசாய நிலங்களை பாதுகாக்குமாறும், மேய்ச்சல் தரைகளை இல்லாதொழிக்கும் இத் திட்டத்தை உடன் கைவிடுமாறும் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

IMG 20211024 WA0346

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...