தக்காளி இல்லாமல் குழம்பு செய்வது எப்படி தமிழக குடும்பப் பெண்கள் தேடி வருகின்றனர்.
இந்தியா- தமிழகத்தில் தக்காளி விலை உயர்வால் குடும்பப் பெண்கள் கூகுளில் தக்காளி இல்லாமல் குழம்பு செய்வது எப்படி என தேடி வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக தமிழகத்திற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.
இதனால் தக்காளியின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாயிலிருந்து 170 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் பொதுமக்கள், தக்காளியை பெற்றோல் விலையோடு ஒப்பிட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், பலர் மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர்.
#IndiaNews
Leave a comment