chennai 2
செய்திகள்இந்தியா

கல்லூரிகளுக்கு விடுமுறையளித்த கனமழை

Share

இந்தியா தமிழகத்தில், தொடர்ந்து பெய்த கடும் மழையால், பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இந்தியா தமிழகத்தில் கடும் மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து 4 நாட்களுக்குக் கடும் மழை தொடரும் என, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எதிர்வு கூறியுள்ள நிலையில், நாளை தமிழகத்தில் சில மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தமிழக மாநிலத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், திண்டுக்கல், அரியலூர், தேனி மாவட்டங்களில் பாடசாலைகள், கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மதுரை, இராமநாதபுரம், திருவாரூரில் பாடசாலைகளுக்கு மாத்திரம் நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று மதியமளவிலேயே, பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்த நிலையில், தற்போது மேலும் சில மாவட்டங்களுக்கும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...